இதய துடிப்பு
நாம் தினம் விழிகளால் பேசவில்லை இருந்தும் தினம் என் விழியில் எப்படியடி விழுந்தாய் ? நாம் தினம் சந்திக்கவில்லை இருந்தும் தினம் கனவில் எப்படியடி வந்தாய் ? நாம் தினம் பேசவில்லை இருந்தும் தினம் வார்த்தையில் எப்படியடி விழுந்தாய் ? எதுவுமே புரியாமல் வந்த காதல் இன்று உன்னோடு மட்டும் வாழ துடிக்கும் இதயத்தை துடி துடிக்க சாகடிக்காமல் உன் காதலால் என் இதயத்தை வண்ணமாக்கு