Posts

Showing posts from April, 2011

மழைத்துளி

ஜன்னல் ஓரக்கண்ணாடியில் வியர்வை துளியாய் விழுந்தது மழைத்துளி  மெதுவாக சப்த்தமின்றி  கீழ் இறங்க அதை காணாதவள் போல்  முந்திய மழைத்துளி நாணத்தில் நிற்க  பிந்தியவன் அவளோடு சேர்ந்து  ஒட்டியபடி மரணத்தை தழுவிக்கொண்டது  பிறப்பு காதல் இறப்பு  மூன்றையும் ஒரே நிமிடத்தில்  நிகழ்த்த மழைத்துளியே உன்னால் மட்டுமே முடியும்

மௌன ராகம்

மௌனங்கள் பேச மறுப்பதும்  வார்த்தைகள் மௌனிப்பதும்  வியப்பல்ல ஆனால் மரணித்த மௌனம் பேசிய அதிசயம்  கண்டேன் உன்னிடம் அன்பே  நீ சொன்ன ஒவ்வொரு சொல்லும்  என் செவிகள் மரணிக்கும் வரை ஒலிக்கும் உன் மௌனங்கள் மட்டும்  என் நிசப்த்த  இரவில் மெட்டுகள் இல்லா ராகமா ஒலிக்கும் 

நினைவுச்சுவடு

நெருக்கமான உறவுகளின் நிழல் படம் என் வெறுமையான நேரத்தில்  அனுமதியின்றி மனக்கண்ணில் ஓடும்  அழகான நிஜ படம் இது என்றும் அழியாத  பசுமையான திரைக்காவியம்  நினைவுகளின் நினைப்பை  எதைக்கொண்டு அழிப்பது  அவை என்றும் அழியா சுவடுகள்

வலி

விலகிபோனவளுக்கு இப்போது  எதற்கு அக்கறை  காயபடுத்தியவளுக்கு இப்போது  எதற்கு மருந்து தேவைகளுக்காக நமது உறவு  இருந்தால் போதும் நீ எனக்கும் நண்பியும் இல்லை நான் உனக்கு நண்பனும் இல்லை