மழைத்துளி
ஜன்னல் ஓரக்கண்ணாடியில்
வியர்வை துளியாய்
விழுந்தது மழைத்துளி
மெதுவாக சப்த்தமின்றி
கீழ் இறங்க அதை காணாதவள் போல்
முந்திய மழைத்துளி நாணத்தில் நிற்க
பிந்தியவன் அவளோடு சேர்ந்து
ஒட்டியபடி மரணத்தை தழுவிக்கொண்டது
பிறப்பு காதல் இறப்பு
மூன்றையும் ஒரே நிமிடத்தில்
நிகழ்த்த மழைத்துளியே
உன்னால் மட்டுமே முடியும்
Comments
Post a Comment