முகமூடி
பழகிய உள்ளம்
உரிமையோடு பழகாதபோது
என்னாலான உன் மீதான
காயம் மாறாதபோது
நடந்ததை நினைத்து
நிஜத்தை மறந்தபோது
உள்ளத்து ரணங்களை
வெளிசிரிப்புக்காக மறைக்கும்போ து
முகத்தை முகமூடியில்
தொலைத்து நடிப்பதையே
விரும்பும் உள்ளம்
Comments
Post a Comment