என்னுள் நீ
உன்னை நினைக்காத இரவும்
உன்னோடு பழகாத பகலும்
இனி இல்லை என் வாழ்வில்
ஒவ்வொரு சொல்லிலும்
ஒவ்வொரு செயலிலும்
ஒவ்வொரு அசைவிலும்
நீ இருக்கிறாய் பெண்ணே
காதல் என்னுள் இவ்வளவு
வியாபித்து என்னை இப்படியாக்கும்
என அறிந்து இருக்கவில்லை
விழி மூடினால் நீ
விழித்தால் நீ
நினைத்தால் நீ
நடந்தால் நீ
எங்கும் எதிலும் உன் நினைப்பு
மரணத்தை விட கொடியது
நீ மட்டும் என்னுடன் இல்லை என்றால்
Comments
Post a Comment