தவிப்பு
நீ விரல் தொடும் தூரம் இருந்தும்
மனம் தொட விரும்பாதது ஏன்
உன் இதயம் கவர முடியாதது ஏன்
என் நினைவு உன்னை துரத்தும்
தூரத்தில் இருந்தும் நாம்
நிஜத்தில் சேர முடியாதது ஏன்
உன் மஞ்சத்தில் என் மீதி
வாழ்க்கை முடியாதது ஏன்
காலம் கைகூடும் வரை
காத்துக்கிடக்குமா இந்த ஜீவன்
உன் பஞ்சு விரலோட
என் விரல் சேர குடுத்துவைக்குமா இந்த ஜீவன்
Comments
Post a Comment