என் அம்மா
நடிப்பு இல்லாத அன்பு
கபடம் இல்லாத பேச்சு
எப்போதும் என்னை நினைக்கும் உள்ளம்
எப்போதும் என்னை அழைக்கும் குரல்
நீ (ங்கள்) பிசைந்த
ஒரு வாய் சோற்றின் சுவைக்கு
அறுசுவை எப்போதும் அடிமை
உன்னோடு (ங்களோடு) கொண்ட
சண்டைகள் பல இருந்தும்
என்னக்கு பிடிச்ச உணவை சமைப்பவள்
வெளியில் செல்லும் போது
உன்னை (ங்களோடு) தொழ மறந்தது இல்லை
நான் போகும் வரை
நீ (ங்கள்) வாசலில் நிற்க மறந்தது இல்லை
ஈர் ஐந்து மாதம் தூக்கம் தொலைத்து
என்னை ஈன்ற என் அம்மா
நீ (ங்கள்) தந்த உயிர் போகும் வரை நீ(ங்கள்) தான் என் கடவுள்
Comments
Post a Comment