என் மனநிலை
தெரிந்த மாற்றங்கள் சில
தெரியாத மாற்றங்கள் பல
கண்டேன் உன்னுள்
அறிந்தும் அறியாதவனாய்
குழம்பினேன் என்னுள்
நீ என்னோடு பழகிய நினைவுகள்
புகைபடமாய் என் விழி சிமிட்டும்
ஒவ்வொரு கணமும் வந்து போகும்
ஏன் இப்படி நீ ?
எப்படி மறந்தாய் நீ ?
என்ன செய்தேன் நான் உனக்கு ?
இன்னும் விடை தெரியாதா
கேள்விகள் வந்து போகும்
அவள் என்னை பைத்தியம்
அவள் என்னை முட்டாள்
என திட்ட
நானோ அவள் சொல்லும்
நிலைக்கு மெல்ல மெல்ல
செல்கிறேன் அறியாமல்
Comments
Post a Comment