மழைத்துளி
மழைத்துளியே இது
உனக்கு பிறப்பா? இறப்பா?
நீ வானையும் மண்ணையும்
இணைக்கும் மொழியா?
மழையே நீ மேகம்
பொழியும் பன்னீரா?
நீ ஏழையின் தாகம்
தீர்க்க வந்த புண்ணியவானா?
வெள்ளத்தை உருவாக்க
வந்த பாவியா?
தெருவோர அனாதையை
குளிப்பாட்டவந்த அருவியா?
என்னவள் ரசிக்க வைக்க
வந்த அழகியா?
எத்தனை முறை வந்து
நின்றாலும் உலகின் முதல் ஊற்று நீ தான்
Comments
Post a Comment