நினைவு ஓவியம்
மாற்றங்கள் ஏனடி உன்னுள்
விலகி செல்ல ஏனடி நினைத்தாய்
உன் தூரம் ஏனடி என்னோடு மட்டும்
என் தவிப்பை ஏனடி மறந்தாய்
என் கனவை ஏனடி கலைத்தாய்
பிரிந்த இமை கூட நொடியில் சேர
உன் பிரிவு மட்டும் சேராத
தண்டவாளமனது ஏனடி
அழியாத நீல வானம் போல்
உன் நினைவு மட்டும்
கலையாத ஓவியமாய்
என்றும் இதயத்தில் இருக்குமடி
Comments
Post a Comment