காதலில் விழுந்தேன்


ஊர் உறங்கும் ஜாமத்தில் கூட 
அரிதாரம் பூசாத உன் 
அழகிய முகம் விம்பமாய் என்
மூடிய இமைக்குள் விழுவதேனடி?

உன் சில்லறை சிரிப்பு மட்டும்
நான் விழிக்கும் வரை 
என் செவிகள் கேட்பது ஏனடி?

நீ இல்லாத கனவு 
எனக்கு மட்டும்
நிலவு அமாவாசையாய் 
இருப்பதேனடி?

அளவில்லா நேசம் 
அடைக்கமுடியாத காதல் 
என்னை இப்படி பைத்தியமாக்குதடி

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்