காதல் தீ
கண்கள் மட்டும் உன்
முகத்தை சிறை பிடித்து
தினம் கனவில் காதல் கொல்ல
மனம் மட்டும் உன்னை
கரங்களை சிறை பிடித்து
நிஜத்தில் வாழ துடிக்குதடி
நீ என் விரல் தொடும்
தூரத்தில் இருக்கும் போதெல்லாம்
என் மனம் மட்டும்
சப்த்தம் இன்றி
உன் மனதிடம்
என் காதலை சொல்லுவதை
நீ அறிவாயா ?
தினம் ஒரு யுகமாய்
வரும் உன் மீதான காதல்
என்னுள் தீயாய் எரியுதடி
Comments
Post a Comment