விண்ணப்பம்
என் இதயம் அறியும்
உன்னை விரும்புவது
உன்னை விரும்புவது
என் உதடு அறியும்
என் வார்த்தைகள்
உன்னை பற்றியே என்று
உன் இதயம் அறியும்
என்னை விரும்பவில்லை என்று
உன் உதடு அறியும்
உன் வார்த்தைகள்
என்னை பற்றியே கிடையாது என்று
தோழியே என்னை காதலனாக்கிவிடு
என் இறுதி உயிரணு மரணிக்கும் வரை
உன்னை காதலிப்பேன்
இல்லையேல் நான் ரசிக்கும் உன்
உள்ளங்கையில் என் கன்னம்
சாய்க்க அனுமைதி கொடு
உன் உள்ளங்கை வெப்பத்தால்
என் உயிர் வாழட்டும்
Comments
Post a Comment