காதல் கொண்டேன்
விண்மீன்கள் விளையாடும் இரவு வேளை
மெல்லிய காற்று என் இதயத்துக்குள் ஊடுருவ
உன் நினைவுகள் ஒவ்வொன்றாக
என் கண் முன்னாக ஓட
என் உயிர் அணுக்கள் காதலின் உணர்வை
உணர தொடங்கியது
எது சரி எது பிழை என தெரியாமல் நெஞ்சம்
உன்னை ஆழமாக நேசிக்க தொடங்கியது
சாதாரண இரவு அன்று
என்னை சந்தோசத்தில் சாகடித்தது
விழமாட்டேன் என நினைத்து
காதல் வானில் பறந்தேன்
இன்றோ ஊணமற்ற முடமாய் கிடக்கிறேன்
கனவு கண்டேன் அது வெறும் கனவுதான் என
இரவு காட்டிகொடுத்தது
அன்று இருந்த விண்மீன் இன்று இல்லை
அன்று முளைத்த காதல் ?............................. .....
Comments
Post a Comment