விருபத்தொடு விரும்பிய உள்ளம் வலித்தடி உன் பதிலால் வலிக்குதடி இன்னும் வலி குறையாமல் இமை கூட நனைந்ததடி வலியால் இரவு ஓடி ஒளியும் முன் சுகமான வலியோடு என் உயிரும் ஒழியகூடாதா
இரவின் தனிமையும் இசையின் மெல்லினமும் இணையும்போது என் உள்ளத்தில் அவளின் ரணமான நினைவுகள் எழுத்தாக பிரசவிக்க முன் கத்தரித்த சொற்கள் பல வலித்தது நான் மட்டும் அல்ல என் கவிதையும் கூடத்தான்
விண்மீன் இன்று சீக்கிரம் தூங்கிவிட்டதேன் ? உன்னை சிறைபிடித்தது யார் அந்த இருட்டு போர்வையா ? நேற்றும் உன்னை காணவில்லையே எனக்கு மட்டும் தான் இந்த கண்ணாமூச்சா ? உனக்கும் வெறுப்பா என் மீது ? ஒளியாதே விண்மீனே என்னை வெறுக்காதே விண்மீனே
வானம் தெளித்த நீரில் ஒற்றையடி பாதையில் சிரிப்புக்கு குறைவின்றி என் தேகம் படாமல் நீயும் உன் தேகம் படாமல் நானும் உரசிக்கொண்டும் கொள்ளாமலும் நடந்த அந்த சில நிமிடங்கள் இன்று பெய்யும் மழையிலும் சாயம் போகாமல் நினைவில் இருக்குதடி அன்பே
சுடிதார் பெண்ணே தன் வாசனை மறந்து சுடிதார் இன்று உன் வாசனையோடு வாழும் பாக்கியத்தை எப்படி அன்பே கொடுத்தாய் உன்னை இப்படி இறுக்க தழுவும் உரிமை எப்படி அன்பே சுடிதாருக்கு கொடுத்தாய் உன் மென்மையான கழுத்தை வருடம் உரிமையை எப்படி அன்பே துப்பட்டாவுக்கு கொடுத்தாய் இருந்தும் மன்னித்து விடுகிறேன் அழகே உன்னை சிணுங்க வைக்க உன் அழகான பாதத்தை எனக்காக விட்டு வைத்தாயே
உன் சிரிப்பை களவாடி என் இரவில் வச்சேனே நிஜத்தில் காணாத நாளில் கனவிலாவது ரசிக்கத்தான் நீ விடும் மூச்சை களவாடி என் நெஞ்சா கூட்டில் வச்சேனே என் அருகில் இல்லாத நாளில் என் ஈர நெஞ்சை குளிர் காயத்தான் உன் பேச்சை களவாடி என் மனசுக்குள் வச்சேனே நீ பேசாத நாளில் உன் பேச்சுக்கள் என் மனசை மென்மையாக்கத்தான் உன் தீண்டலை களவாடி என் தேகத்தில் வச்சேனே நீ தீண்டா நேரம் என் தேகம் உன் சூட்டை உணரத்தான் உன் காதலை களவாட அனுமதிப்பாயா? என் ஜீவன் மரித்தாலும் என் உயிர் காதல் என் கல்லறையில் உனக்காக காத்து கிடக்கும்
இன்று ஒரு மணநாள் எங்கும் அலங்கார தோரணை எங்கும் மலர்கள் செறிந்த மணபந்தல் மணாளனை தேடியது கண்கள் பொறாமை கொண்ட மனம் தவித்தது தேவதைகள் சூழ என்னவள் குறையாத அழகோடு வந்தால் ஒரு முறையாவது பாரடி என்றது மனம் இதை காணத்தான் காதலித்தேனா? பிரிவு விஷத்திலும் கொடியது என அன்று உணர மறந்தது ஏன்? கையில் ஊறிய கற்கண்டை தட்டி விட்டு நடந்தேன் தெருவை நோக்கி