என் களவு காதல்
உன் சிரிப்பை களவாடி
என் இரவில் வச்சேனே
நிஜத்தில் காணாத நாளில்
கனவிலாவது ரசிக்கத்தான்
நீ விடும் மூச்சை களவாடி
என் நெஞ்சா கூட்டில் வச்சேனே
என் அருகில் இல்லாத நாளில்
என் ஈர நெஞ்சை குளிர் காயத்தான்
உன் பேச்சை களவாடி
என் மனசுக்குள் வச்சேனே
நீ பேசாத நாளில்
உன் பேச்சுக்கள்
என் மனசை மென்மையாக்கத்தான்
உன் தீண்டலை களவாடி
என் தேகத்தில் வச்சேனே
நீ தீண்டா நேரம்
என் தேகம்
உன் சூட்டை உணரத்தான்
உன் காதலை களவாட
அனுமதிப்பாயா?
என் ஜீவன் மரித்தாலும்
என் உயிர் காதல் என் கல்லறையில்
உனக்காக காத்து கிடக்கும்
Comments
Post a Comment