சாயம் போகாத நினைவு
வானம் தெளித்த நீரில்
ஒற்றையடி பாதையில்
சிரிப்புக்கு குறைவின்றி
என் தேகம் படாமல் நீயும்
உன் தேகம் படாமல் நானும்
உரசிக்கொண்டும் கொள்ளாமலும்
நடந்த அந்த சில நிமிடங்கள்
இன்று பெய்யும் மழையிலும்
சாயம் போகாமல் நினைவில்
இருக்குதடி அன்பே
Comments
Post a Comment