காதலியின் திருமணம்
இன்று ஒரு மணநாள்
எங்கும் அலங்கார தோரணை
எங்கும் மலர்கள் செறிந்த மணபந்தல்
மணாளனை தேடியது கண்கள்
பொறாமை கொண்ட மனம் தவித்தது
தேவதைகள் சூழ என்னவள்
குறையாத அழகோடு வந்தால்
ஒரு முறையாவது பாரடி என்றது மனம்
இதை காணத்தான் காதலித்தேனா?
பிரிவு விஷத்திலும் கொடியது என
அன்று உணர மறந்தது ஏன்?
கையில் ஊறிய கற்கண்டை
தட்டி விட்டு நடந்தேன்
தெருவை நோக்கி
Comments
Post a Comment