நான் விரும்பும் காதலி


நான் உன் விழியை காதலிக்கவில்லை 
விழி அசைவை காதலித்தேன் 
நான் உன் இதழை காதலிக்கவில்லை 
உன் இதழ் சுழிப்பை காதலித்தேன் 
நான் உன் கன்னத்தை காதலிக்கவில்லை 
உன் கன்னத்துக்குழியை காதலித்தேன் 
நான் உன் இமையை காதலிக்கவில்லை 
உன் இமையை மறைக்கும் கண்ணாடியை காதலித்தேன் 
உன் ஐவிரலை காதலிக்கவில்லை 
என்னை தொட்ட விரலை காதலித்தேன்   
உன் அழகை காதலிக்கவில்லை 
உன் அன்பை காதலித்தேன் 
உன் உடம்பை காதலிக்கவில்லை 
உன் உயிரை காதலித்தேன்
என் உயிர் போகும் வரை 
என் காதல் உன்னோடு மட்டும் தான் அன்பே

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்