வினையான குறும்பு

குறும்பாக என் வாயால் விழுந்த வார்த்தை
அவளின்  பிஞ்சு மனதை சுட்டது
ஒரு கணம் அதிர்ந்தாள்  குழம்பினாள்
சொன்ன வார்த்தை குறும்பென்று தெரியாமல்
இதை தெரிந்த என் மனமோ துடித்தது
ஏன் அவள் புரியவில்லை நான் செய்த குறும்பை
நான்  என்னையே வெறுத்தேன்
இனியும் செய்யேன் அவளை புண்படுத்தும் குறும்பை
அவள் மறந்தாலும் நான் மறவேன்
தவமின்றி கிடைத்த அவளின் நட்பை
 

Comments

Popular posts from this blog

புரிதல் இல்லாத நட்பு

ஒரு தலை காதல்

நான் கண்ட காதல்