நானும் மனுசனே புத்தன் அல்ல
விஷயம் அறியாமல் வசை பாடினேன் என்றார்கள்
அவளின் உணர்வுகள் தெரியாமல்நான் வார்த்தைகளை உமிழ்ந்தேன் என்றார்கள்
அங்கொன்று இங்கொன்று கோர்த்து
திரித்து பேசுகிறேன் என்றார்கள்
வெறுக்காதே அன்பு செய் என்று கருத்தும் கூறினார்கள்
அவள் இயல்பாக இல்லை என்று சொன்னால்
இது என் விபரீத கற்பனை என்றார்கள்
திடீர் விலகல் திடீர் மௌனம்
திடீர் அசாதாரண நடத்தைகள்
எங்கனம் என் மனம் பொறுக்கும்
நானும் மனுசனே புத்தன் அல்ல
Comments
Post a Comment