புரிதல் இல்லாத நட்பு புரிந்து கொள்ளாத நண்பன் சிந்தித்து பேச முடியாதவன் நட்பை புண்படுத்தும் தோழன் இத்தனை குணங்களும் இருந்தும் தோழியே இவனை ஏன் நண்பனாக்கினாய்
அந்தி சாயும் நேரம் என்னவளின் வருகையை விழி மூடி மூடாமல் தேடியது கண்கள் மனதை மெல்லென வருடியது அவளின் வழமையான வாசனை அவள் என் அருகில் அமர்ந்ததும் ஆணுக்குள்ளும் பெண்மை உண்டென்பதை உணர்தேன் அடிவானம் கூட அவளின் அவருகையால் சிவந்தது கடிகாரத்துக்கு மட்டும் ஏன் இத்துனை அவசரம் அறுபது நிமிடத்தை அறுபது நொடியில் கடந்தது ஏன் ? மீண்டும் அவளை பிரிந்தேன் என் மனதில் அல்ல இந்த பூங்காவில்
Comments
Post a Comment