ஏன் நாம் பழகினோம்
பிரிவோம் என்று தெரிந்தும் உன்னை
ஏன் மணக்க நினைத்தேன்
நான் நினைத்ததும் தவறில்லை
நீ மறுத்ததிலும் தவறில்லை
யார் தவறு என்பதை காலம் அறியும்
புரிதல் இல்லாத நட்பு புரிந்து கொள்ளாத நண்பன் சிந்தித்து பேச முடியாதவன் நட்பை புண்படுத்தும் தோழன் இத்தனை குணங்களும் இருந்தும் தோழியே இவனை ஏன் நண்பனாக்கினாய்
தேவைகள் இருக்கும் வரை வேண்டப்பட்டவர்கள் தேவைகள் தீர்ந்த பின் வேண்டபடாதவர்கள் உன் தேவை இது தான் என்று தெரிந்து இருந்தால் அன்றே நிறுத்தி இருக்கலாம் - நம் உறவை இன்று நினைக்க மறந்து இருக்கலாம் எல்லாம் சில காலம் மட்டுமே தேவைகள் மாறும் உறவுகள் மாறும் வாழ்க்கை எனும் பயணத்தில் நிழலாக வரும் உன் நினைவுகள் மட்டுமே மாறது
Comments
Post a Comment