பசுமை நினைவு
மலை போல் கற்பாறையில்
ஒளிந்து விளையடினோமே
தலையணைக்காக பஞ்சு
மரம் மேல் கல் எறிந்தோமே
அம்மாவுக்கு தெரியாமல் மரக்குச்சியில்
புகை பிடித்தோமே
பள்ளி பஸ் பிடிக்க தொலை தூரம்
வலி தெரியாமல் நடந்தோமே
ஓடையில் நீராடி தோட்டத்தில்
களவாய் மாங்காய் திரிடினோமே
கலவரத்தில் உயிருக்கு பயந்து
ஓடி ஒளிந்தோமே
எப்படி மறக்கும் என் மனம்
அந்த பசுமை நினைவை
Comments
Post a Comment