வண்டு
கதிரவனை கண்ட பூக்கள் எல்லாம்
தன் இதழ்களை விரித்து சிரித்துகொண்டிருக்க
ஒரு பூ மட்டும் காம்பு எனும் கட்டிலில்
இதழ் எனும் போர்வைக்குள் இன்னும் உறக்கம்
அவள் முகம் காண தவம் கிடந்த வண்டு
இதழை திறந்து மெதுவாக உள்ளே சென்றது
வெண்ணிலவின் ஒளியும் மல்லிகையின் வாசமும்
ஒருங்கே சேர்ந்த தன்னவளின்
அமைதியான உறக்கத்தை ரசித்த வண்டு
ஓசை எழுப்பாமல் பறந்து சென்றது
Comments
Post a Comment