Posts

Showing posts from 2011

நினைவு ஓவியம்

மாற்றங்கள் ஏனடி உன்னுள் விலகி செல்ல ஏனடி நினைத்தாய் உன் தூரம் ஏனடி என்னோடு மட்டும் என் தவிப்பை ஏனடி மறந்தாய்  என் கனவை ஏனடி கலைத்தாய்  பிரிந்த இமை கூட நொடியில் சேர உன் பிரிவு மட்டும் சேராத  தண்டவாளமனது ஏனடி  அழியாத நீல வானம் போல்  உன் நினைவு மட்டும்  கலையாத ஓவியமாய்  என்றும் இதயத்தில் இருக்குமடி

காதல் தீ

கண்கள் மட்டும் உன் முகத்தை சிறை பிடித்து  தினம் கனவில் காதல் கொல்ல மனம் மட்டும் உன்னை கரங்களை சிறை பிடித்து  நிஜத்தில் வாழ துடிக்குதடி நீ என் விரல் தொடும்  தூரத்தில் இருக்கும் போதெல்லாம்  என் மனம் மட்டும்  சப்த்தம் இன்றி  உன் மனதிடம்  என் காதலை சொல்லுவதை  நீ அறிவாயா ? தினம் ஒரு யுகமாய்  வரும் உன் மீதான காதல்  என்னுள் தீயாய் எரியுதடி 

காதலில் விழுந்தேன்

ஊர் உறங்கும் ஜாமத்தில் கூட  அரிதாரம் பூசாத உன்  அழகிய முகம் விம்பமாய் என் மூடிய இமைக்குள் விழுவதேனடி? உன் சில்லறை சிரிப்பு மட்டும் நான் விழிக்கும் வரை  என் செவிகள் கேட்பது ஏனடி? நீ இல்லாத கனவு  எனக்கு மட்டும் நிலவு அமாவாசையாய்  இருப்பதேனடி? அளவில்லா நேசம்  அடைக்கமுடியாத காதல்  என்னை இப்படி பைத்தியமாக்குதடி

மழைத்துளி

மழைத்துளியே இது  உனக்கு பிறப்பா? இறப்பா? நீ வானையும் மண்ணையும்  இணைக்கும் மொழியா? மழையே நீ மேகம்  பொழியும் பன்னீரா? நீ ஏழையின் தாகம்  தீர்க்க வந்த புண்ணியவானா? வெள்ளத்தை உருவாக்க வந்த பாவியா? தெருவோர அனாதையை  குளிப்பாட்டவந்த அருவியா? என்னவள் ரசிக்க வைக்க  வந்த அழகியா? எத்தனை முறை வந்து   நின்றாலும் உலகின் முதல் ஊற்று நீ தான்

ஒற்றை இதயம்

விட்டில் பூச்சி ஒளியைதேடி  பறக்கும் ஒருநாள் வாழ்க்கைக்காக நானோ இருட்டைதேடி போகிறேன்  பலநாள் வாழ்கையை தொலைத்துக்கொள்ள காதலில் விழுந்தேன் விளையாட்டாக வந்த காதல் இல்லை விபரம் அறிந்து வந்த காதல்  உன் இதயத்தோடு வாழ ஆசைப்பட்ட என் இதயம் உன் வார்த்தையால்  ஒற்றை இதயத்தோடு  ஒரு தலைகாதலனாய்  சத்தமின்றி அழுகின்றது

கலைந்த கனவு

என் தூக்கத்தில் பின் ஜாமத்தில்  ஓர் கனவில் நீயும் நானும் கடற்கரையில்  ஓடி வரும் கடல் அலையில் பாதம் நனைக்கையில் உன் உள்ளங்கையில்  என் உதடு முத்தத்தால் கோலமிட  செல்ல சிணுங்கலுடன்  நீ என்னை கிள்ள விழித்து கொண்டது  என் விழிகள்  கனவு கலைந்த சோகத்தோடும்   காதல் கொண்ட சுகத்தோடும் மீண்டும் விழிகளை மூடிக்கொண்டேன் உன்னோடு காதல் கொள்ள

என் மனநிலை

தெரிந்த மாற்றங்கள் சில தெரியாத மாற்றங்கள் பல கண்டேன் உன்னுள்  அறிந்தும் அறியாதவனாய் குழம்பினேன் என்னுள்  நீ என்னோடு பழகிய நினைவுகள்  புகைபடமாய் என் விழி சிமிட்டும் ஒவ்வொரு கணமும் வந்து போகும் ஏன் இப்படி நீ ?  எப்படி மறந்தாய் நீ ? என்ன செய்தேன் நான் உனக்கு ? இன்னும் விடை தெரியாதா  கேள்விகள் வந்து போகும் அவள் என்னை பைத்தியம்  அவள் என்னை முட்டாள்  என திட்ட நானோ அவள் சொல்லும் நிலைக்கு மெல்ல மெல்ல செல்கிறேன் அறியாமல் 

என்னுள் நீ

உன்னை நினைக்காத இரவும் உன்னோடு பழகாத பகலும் இனி இல்லை என் வாழ்வில் ஒவ்வொரு சொல்லிலும்  ஒவ்வொரு செயலிலும்  ஒவ்வொரு அசைவிலும்  நீ இருக்கிறாய் பெண்ணே காதல் என்னுள் இவ்வளவு  வியாபித்து என்னை இப்படியாக்கும்  என அறிந்து இருக்கவில்லை  விழி மூடினால் நீ  விழித்தால் நீ  நினைத்தால் நீ நடந்தால் நீ எங்கும் எதிலும் உன் நினைப்பு மரணத்தை விட கொடியது நீ மட்டும் என்னுடன் இல்லை என்றால் 

தற்கொலை

புற்களில் தோன்றும் பனித்துளி  பகலவனை கண்ட உடன்  தற்கொலை செய்துகொள்ளும் விழியோரம் நனைக்கும் கண்ணீர்த்துளி  கவலையின் உச்சத்தை தொட்ட உடன்  தற்கொலை செய்துகொள்ளும்

நிஜமான கனவு

அழகான அந்தி பொழுது  அதை மிஞ்சும்  என்னவளின் அழகை  நான் மட்டும் ரசிக்க  அவளின் விழிகளோ என் ரசிப்பை கண்டு  நாணத்தோடு சிரித்தது  அன்று கொண்ட கனவு  இன்று நிஜத்தில் என் எதிரே நீ உன் எதிரே நான்  தினம் கதைக்க  எதுவும் இல்லை தோணும்   உன்னை காணும் வரை வார்த்தை கடல் போல்  வந்து விழும்  உன்னை கண்ட பின் நீ சொலும் ஒவ்வொரு  சொல்லையும் ரசித்த நான்  உன்னோடு வாழபோகும் அந்த  அழகான வாழ்கையை தினமும்  உயிரோட்டமாய் பார்கிறேன்  என் விழிகளில்   

முகமூடி

பழகிய உள்ளம்  உரிமையோடு பழகாதபோது என்னாலான உன் மீதான  காயம் மாறாதபோது நடந்ததை நினைத்து  நிஜத்தை மறந்தபோது  உள்ளத்து ரணங்களை  வெளிசிரிப்புக்காக மறைக்கும்போ து  முகத்தை முகமூடியில்  தொலைத்து நடிப்பதையே  விரும்பும் உள்ளம்  

இதய துடிப்பு

நாம் தினம் விழிகளால் பேசவில்லை  இருந்தும் தினம் என் விழியில்  எப்படியடி விழுந்தாய் ?  நாம் தினம் சந்திக்கவில்லை  இருந்தும் தினம் கனவில்  எப்படியடி வந்தாய் ? நாம் தினம் பேசவில்லை  இருந்தும் தினம் வார்த்தையில்  எப்படியடி விழுந்தாய் ? எதுவுமே புரியாமல் வந்த காதல்  இன்று உன்னோடு மட்டும் வாழ துடிக்கும் இதயத்தை  துடி துடிக்க சாகடிக்காமல்  உன் காதலால் என் இதயத்தை  வண்ணமாக்கு 

சுகமான வலி

விருபத்தொடு விரும்பிய உள்ளம் வலித்தடி உன் பதிலால்  வலிக்குதடி இன்னும்  வலி குறையாமல்  இமை கூட நனைந்ததடி வலியால்  இரவு ஓடி ஒளியும் முன் சுகமான வலியோடு  என் உயிரும்   ஒழியகூடாதா

தொலைந்த புன்னகை

தொலைத்த என் புன்னகையை  இன்று தேடுகின்றேன்  உன்னை தொலைத்த நாளில் தான் என் புன்னகை தொலைந்தது என்று  அறியாதவனாய் 

கவிதையின் வலி

இரவின் தனிமையும்  இசையின் மெல்லினமும்  இணையும்போது என் உள்ளத்தில்  அவளின் ரணமான நினைவுகள்  எழுத்தாக பிரசவிக்க முன்  கத்தரித்த சொற்கள் பல வலித்தது நான் மட்டும் அல்ல என் கவிதையும் கூடத்தான்  

என் விண்மீன்

விண்மீன் இன்று  சீக்கிரம் தூங்கிவிட்டதேன் ? உன்னை சிறைபிடித்தது யார் அந்த இருட்டு போர்வையா ? நேற்றும் உன்னை காணவில்லையே  எனக்கு மட்டும் தான் இந்த கண்ணாமூச்சா ? உனக்கும் வெறுப்பா என் மீது ? ஒளியாதே விண்மீனே  என்னை வெறுக்காதே விண்மீனே 

சாயம் போகாத நினைவு

வானம் தெளித்த நீரில்  ஒற்றையடி பாதையில்  சிரிப்புக்கு குறைவின்றி  என் தேகம் படாமல் நீயும் உன் தேகம் படாமல் நானும் உரசிக்கொண்டும் கொள்ளாமலும்  நடந்த அந்த சில நிமிடங்கள்  இன்று பெய்யும் மழையிலும்  சாயம் போகாமல் நினைவில் இருக்குதடி அன்பே

சுடிதார் பெண்ணே

சுடிதார் பெண்ணே தன் வாசனை மறந்து சுடிதார்  இன்று உன் வாசனையோடு  வாழும் பாக்கியத்தை  எப்படி அன்பே கொடுத்தாய் உன்னை இப்படி இறுக்க தழுவும் உரிமை எப்படி அன்பே  சுடிதாருக்கு கொடுத்தாய் உன் மென்மையான கழுத்தை வருடம் உரிமையை  எப்படி அன்பே  துப்பட்டாவுக்கு கொடுத்தாய் இருந்தும் மன்னித்து விடுகிறேன் அழகே  உன்னை சிணுங்க வைக்க  உன் அழகான பாதத்தை  எனக்காக விட்டு வைத்தாயே

என் களவு காதல்

உன் சிரிப்பை களவாடி  என் இரவில் வச்சேனே நிஜத்தில் காணாத நாளில் கனவிலாவது ரசிக்கத்தான்  நீ விடும் மூச்சை களவாடி என் நெஞ்சா கூட்டில் வச்சேனே என் அருகில் இல்லாத நாளில் என் ஈர நெஞ்சை குளிர் காயத்தான் உன் பேச்சை களவாடி என் மனசுக்குள் வச்சேனே நீ பேசாத நாளில் உன் பேச்சுக்கள்  என் மனசை மென்மையாக்கத்தான் உன் தீண்டலை களவாடி என் தேகத்தில் வச்சேனே நீ தீண்டா நேரம்  என் தேகம்   உன் சூட்டை உணரத்தான்  உன் காதலை களவாட அனுமதிப்பாயா? என் ஜீவன் மரித்தாலும்  என் உயிர் காதல் என் கல்லறையில்  உனக்காக காத்து கிடக்கும் 

காதலியின் திருமணம்

இன்று ஒரு மணநாள் எங்கும் அலங்கார தோரணை எங்கும் மலர்கள் செறிந்த மணபந்தல் மணாளனை  தேடியது கண்கள்  பொறாமை கொண்ட மனம் தவித்தது தேவதைகள் சூழ என்னவள்  குறையாத அழகோடு வந்தால்  ஒரு முறையாவது பாரடி என்றது மனம் இதை காணத்தான் காதலித்தேனா? பிரிவு விஷத்திலும் கொடியது என  அன்று உணர மறந்தது ஏன்? கையில் ஊறிய கற்கண்டை தட்டி விட்டு நடந்தேன்  தெருவை நோக்கி

காதல் கொண்டேன்

விண்மீன்கள் விளையாடும் இரவு வேளை மெல்லிய காற்று என் இதயத்துக்குள் ஊடுருவ உன் நினைவுகள் ஒவ்வொன்றாக  என் கண் முன்னாக ஓட  என் உயிர் அணுக்கள் காதலின் உணர்வை  உணர தொடங்கியது  எது சரி எது பிழை என தெரியாமல் நெஞ்சம் உன்னை ஆழமாக நேசிக்க தொடங்கியது சாதாரண இரவு அன்று  என்னை சந்தோசத்தில் சாகடித்தது விழமாட்டேன் என நினைத்து  காதல் வானில் பறந்தேன் இன்றோ ஊணமற்ற முடமாய் கிடக்கிறேன்  கனவு கண்டேன் அது வெறும் கனவுதான் என இரவு காட்டிகொடுத்தது  அன்று இருந்த விண்மீன் இன்று இல்லை அன்று முளைத்த காதல் ?............................. .....

விண்ணப்பம்

என் இதயம் அறியும்  உன்னை விரும்புவது என் உதடு அறியும்  என் வார்த்தைகள்  உன்னை பற்றியே என்று உன் இதயம் அறியும்  என்னை விரும்பவில்லை என்று  உன் உதடு அறியும்  உன் வார்த்தைகள்  என்னை பற்றியே கிடையாது என்று தோழியே என்னை காதலனாக்கிவிடு  என் இறுதி உயிரணு மரணிக்கும் வரை உன்னை காதலிப்பேன் இல்லையேல்  நான் ரசிக்கும் உன்  உள்ளங்கையில் என் கன்னம் சாய்க்க அனுமைதி கொடு உன் உள்ளங்கை வெப்பத்தால்  என் உயிர் வாழட்டும்

பத்தோடு பதினொன்று

பேசிய உள்ளம் பேசாத போது உனக்கென்ன நண்பா  நீ பத்தோடு பதினொன்று  என்பதை ஏன் மறந்தாய் நண்பா அட பைத்தியக்கார ஒரு நாள்  உன் வீட்டு நாய் கூட உன்னை கண்டுகொள்ளாது  உன்னோடு கூட இருப்பது  உன் உயிர் மட்டும் தான் என்பதை எப்போதடா உணர்வாய் நண்பா

துளிகள்

ஈரத்தில் தொடங்கி  ஈரத்தில் முடிவது -  வாழ்க்கை  பிறப்பின் ஓசை அம்மா இறப்பின் ஓசை ஐயோ -  அழுகை  சந்தோசமான துக்கம் -  தனிக்கட்டை  துக்கமான சந்தோசம் -  திருமணம்  என் முடிவு உனது தொடக்கம்  உன் முடிவு எனது தொடக்கம் -   புதிய அத்தியாயம் 

தனிமையின் இரவு

இரவு விளக்குகள்  அணைந்த பின்பு கூட விழிகளின் விளக்குகள்  இன்னும் அணையவில்லை  ஏனடி அன்பே ? விழித்திரையில் உனது விம்பம் மறைய மறுப்பதாலா ? இரவின் நீளம் மாறவில்லை ஆனால் உறக்கத்தின் நீளம் குறைவது  ஏன் அன்பே ? இப்படி விடை தெரியாத கேள்விகளுடன்  தனிமையின் இரவு விடியலை  காணும் வரை நகர்கிறது 

நான் தேடும் முற்றுபுள்ளி

விடை தெரியாத கனவுகள்  விழுங்கப்பட்ட ஆசைகள் துரத்தப்பட்ட விருப்பங்கள்  முற்றுப்புள்ளியை வேகமாய் தேடும் ரணமான உள்ளம் காத்திருப்பேன் முற்றுபெறாத  முற்றுப்புளிக்காக............. ...........

ஏன் இந்த நிலை

பேசாதவரை இருக்கும் உள்ளம் இரும்பை உன் பேச்சினால் கனிந்தது மெல்ல கரும்பாய் ஏன் இந்த நிலை ஒருபோதும் விரும்பமாட்டாய் என தெரிந்தும்  மேற்கில் சூரியன் உதிப்பதை எதிர்பார்க்கும் மனம் ஏன் இந்த நிலை விடை தெரியாத  மூட மனமே மீண்டும் ஒரு தலை  காதலுக்கான முன்னோட்டமோ ?

என் அம்மா

நடிப்பு இல்லாத அன்பு கபடம் இல்லாத பேச்சு எப்போதும் என்னை நினைக்கும் உள்ளம் எப்போதும் என்னை அழைக்கும் குரல் நீ (ங்கள்)  பிசைந்த  ஒரு வாய் சோற்றின் சுவைக்கு  அறுசுவை எப்போதும் அடிமை உன்னோடு (ங்களோடு)  கொண்ட சண்டைகள் பல இருந்தும் என்னக்கு பிடிச்ச உணவை சமைப்பவள் வெளியில் செல்லும் போது உன்னை (ங்களோடு) தொழ மறந்தது இல்லை  நான் போகும் வரை  நீ (ங்கள்)  வாசலில் நிற்க மறந்தது இல்லை ஈர் ஐந்து மாதம் தூக்கம் தொலைத்து என்னை ஈன்ற என் அம்மா நீ (ங்கள்) தந்த உயிர் போகும் வரை நீ(ங்கள்) தான் என் கடவுள் 

காதல் விதை

வெறுமையான உள்ளத்தில  விதைக்கப்பட்ட விதை நீ   முதலில் வளர மறுத்தாய் பின்பு மெதுவாய் துளிர் விட்டாய் கிளைகளை விரித்து  என் உள்ளத்துக்குள் வியாபித்தாய்  அழகான நிழலாய் என் உள்ளம் குளிர்ந்தது    மலர்களை தூவினாய்  என் உள்ளத்தின் எதிபார்ப்பை கூட்டினாய்  பூ கனியானது  என் எதிர்பார்ப்பு காதலானது   இந்த அழகான மரம் என்  கூடவே இருக்காதா இல்லை ஆணி வேரோடு என் உயிரையும் பிடுங்கி மரிக்காதா

மழைத்துளி

ஜன்னல் ஓரக்கண்ணாடியில் வியர்வை துளியாய் விழுந்தது மழைத்துளி  மெதுவாக சப்த்தமின்றி  கீழ் இறங்க அதை காணாதவள் போல்  முந்திய மழைத்துளி நாணத்தில் நிற்க  பிந்தியவன் அவளோடு சேர்ந்து  ஒட்டியபடி மரணத்தை தழுவிக்கொண்டது  பிறப்பு காதல் இறப்பு  மூன்றையும் ஒரே நிமிடத்தில்  நிகழ்த்த மழைத்துளியே உன்னால் மட்டுமே முடியும்

மௌன ராகம்

மௌனங்கள் பேச மறுப்பதும்  வார்த்தைகள் மௌனிப்பதும்  வியப்பல்ல ஆனால் மரணித்த மௌனம் பேசிய அதிசயம்  கண்டேன் உன்னிடம் அன்பே  நீ சொன்ன ஒவ்வொரு சொல்லும்  என் செவிகள் மரணிக்கும் வரை ஒலிக்கும் உன் மௌனங்கள் மட்டும்  என் நிசப்த்த  இரவில் மெட்டுகள் இல்லா ராகமா ஒலிக்கும் 

நினைவுச்சுவடு

நெருக்கமான உறவுகளின் நிழல் படம் என் வெறுமையான நேரத்தில்  அனுமதியின்றி மனக்கண்ணில் ஓடும்  அழகான நிஜ படம் இது என்றும் அழியாத  பசுமையான திரைக்காவியம்  நினைவுகளின் நினைப்பை  எதைக்கொண்டு அழிப்பது  அவை என்றும் அழியா சுவடுகள்

வலி

விலகிபோனவளுக்கு இப்போது  எதற்கு அக்கறை  காயபடுத்தியவளுக்கு இப்போது  எதற்கு மருந்து தேவைகளுக்காக நமது உறவு  இருந்தால் போதும் நீ எனக்கும் நண்பியும் இல்லை நான் உனக்கு நண்பனும் இல்லை

கண்ணீர்

இமை எனும் மூடிய கதவோரத்தில்  மனதை கனமாக்கிய கவலையின் ஈரம் -   கண்ணீர்  

உயிர்

ஈராண்டுக்கு முன்பு என் அருகில் இருந்து என்னை நேசித்த உயிர்  என் கண் முன்பே பிரிந்த போது  என் மனம் பிசைந்தது  என் கன்னத்தை வருடி "வாயா" என்றழைத்த கை மறக்கட்டயான போது  என் மனம் நொறுங்கியது ஈராண்டுக்கு பின்பு அதே நாளில்  புதிய உயிரின் வருகையால்  பிரிவின் துயரத்துக்கு மருந்தாகியது 

காதல் திருட்டு

உன் சிரிப்பை திருடினேனே  அறிவாயா ? உன் நிழலை திருடினேனே  அறிவாயா ? உன் வாசனையை திருடினேனே  அறிவாயா ? உன் மென்மையை திருடினேனே அறிவாயா ? நீ விடும் மூச்சை திருடினேனே அறிவாயா ? உன் மனதை திரிடிகொள்ள உன் அனுமதியை எதிர் பார்த்து  காத்துகிடக்கும் என் மனம் படும் பாட்டை நீ அறிவாயா பெண்ணே ?

தேவைகள்

தேவைகள் இருக்கும் வரை வேண்டப்பட்டவர்கள்  தேவைகள் தீர்ந்த பின் வேண்டபடாதவர்கள்  உன் தேவை இது தான் என்று தெரிந்து இருந்தால் அன்றே நிறுத்தி இருக்கலாம் - நம் உறவை    இன்று நினைக்க மறந்து இருக்கலாம் எல்லாம் சில காலம் மட்டுமே தேவைகள் மாறும்  உறவுகள் மாறும் வாழ்க்கை எனும் பயணத்தில் நிழலாக வரும் உன் நினைவுகள் மட்டுமே மாறது

தவிப்பு

நீ விரல் தொடும் தூரம் இருந்தும் மனம் தொட விரும்பாதது ஏன் உன் இதயம் கவர முடியாதது ஏன்  என் நினைவு உன்னை துரத்தும்  தூரத்தில் இருந்தும் நாம்  நிஜத்தில் சேர முடியாதது ஏன்  உன் மஞ்சத்தில் என் மீதி  வாழ்க்கை முடியாதது ஏன் காலம் கைகூடும் வரை  காத்துக்கிடக்குமா இந்த ஜீவன் உன் பஞ்சு விரலோட  என் விரல் சேர குடுத்துவைக்குமா இந்த ஜீவன்

ஒரு தலை காதல்

நீ விடும் மூச்சு காற்றை  யார் வேணுமானாலும் சுவாசிக்கலாம் நான் விடும் மூச்சு காற்றை நீ மட்டும் சுவாசிக்க வேண்டும் -  ஒரு தலை காதல் 

கனவில் காதல்

உன் விழிகள் உறங்கலாம்  இதழ்கள் உறங்கலாம் காது மடல்கள் உறங்கலாம் கை விரல்கள் உறங்கலாம் ஏன் உன் கூந்தல் கூட உறங்கலாம் ஆனால் உன் கனவு உறங்காது  கனவில் நாம் கொள்ளும் காதல் உறங்காது கனவில் நாம் கொள்ளும் அணைப்பு உறங்காது கனவில் நாம் இடும் முத்தம் உறங்காது கனவில் முகத்தை வருடும் கூந்தல் உறங்காது அழகே இமை என்னும் பூட்டை இப்போதே திறக்காதே  உன் கனவு இல்லை நாம் காதல் கலைந்து விடும்

ஒரு வரி கவிதை

விடியல் இல்லாத உறக்கம் - மரணம்   அமைதியான இருட்டறையில் இருந்து அமைதியற்ற உலகத்திற்கு - ஜனனம்   வானையும் மண்ணையும் இணைக்கும் நூல் - மழை   விரசம் இல்லாத தொடுகை - நட்பு    

காவலன்

காதோரும் மெல்லிசை கழுத்து வரை கம்பளம் கூந்தலுக்கிடையே விரலை நீட்டும்  காற்றுடன் தொடங்கும் உன் பயணத்தில் பேருந்து மெல்லென தாலாட்ட உன் விழிகள் இமைக்குள் ஒழிந்திட பகலவன் உன் முகம் கண்டு சிரிக்கும் வரை இரவு உனக்கு காவலனாக இருக்கட்டும் 

காதலித்து பார்

நீண்டகால நட்பை தொலைப்பதும் காதல் எட்டி பார்க்கும் நட்பை   வெட்டுவதும் காதல் காதலித்து பார் காமம் துளிர் விடும் நட்பு விடைபெறும் காதல் என்றால் அன்பாம் நட்பு என்றால் ? யோசித்து சொல் உன் காதலுக்கு சற்று ஓய்வு கொடுத்து  

யார் செய்த பாவம்

சிரத்திலோ இனும் மாறாத ஆழமான காயம் கையிலோ என்றுமே மாறாத வடு ஈன்ற தாயும் ஓடி விளையாடிய தங்காவும் இன்றோ வதை முகாமில் ஆசை தந்தை இறப்பதை கண்டும் ஒன்றுமே செய்ய முடியா பிஞ்சு மனம் நெஞ்சிலோ ஆயிரம் பாரம் !  கண்களிலோ கல்வியில் ஆர்வம் ! இத்தனையும் கண்டேன் அந்த இளம் சிறுவனிடம் 

செல் போன்

விடிந்த உடன் உனது எஸ்.எம்.எஸ் தேடும் கண் இமை போர்வையை பாதி திறந்த கண்கள் ரிங் பண்ணும் போதெல்லாம் அழைப்பது நீயாக இருக்ககூடாத என என்னும் மனம்  உனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணும் போது மட்டும் விரல்  நுனிகளுக்கு ஏன் இத்தனை சந்தோசம் நெடு நேரம் உன்னுடன் கதைக்கும் போது செல்போன்  செய்யும் செல்ல குறும்பு செவிகளை சூடேற்றுவது  ஜொள்ளு விட்டது போதும் என்று  உன்னை திட்டியதுக்கும்  கொஞ்சியதுக்கும் சாட்சி கீ பேட் மட்டும் தான்

இதுவும் கடந்து போகும்

வலிகள் மிகுந்த நாட்கள் எதிர்பாரத மாற்றங்கள் உள்ளத்தில் ஆயிரம் ரணங்கள் ஆறுதல் சொல்ல ஒரு நாதியும் இல்லை இதற்கு மேல் எழுத வார்த்தையும் இல்லை இருந்தும் ஒரு வார்த்தை இதுவும் கடந்து போகும்

புரிதல் இல்லாத நட்பு

புரிதல் இல்லாத நட்பு புரிந்து கொள்ளாத நண்பன் சிந்தித்து பேச முடியாதவன் நட்பை புண்படுத்தும் தோழன் இத்தனை குணங்களும் இருந்தும் தோழியே இவனை ஏன் நண்பனாக்கினாய்  

தாலாட்டும் நினைவுகள்

அவள் இமை மூடி திறக்கும் ஒவ்வொரு கணமும் என் மனம் கோடையிலும் குளிர்ந்தது அவள் பேசும் ஒவ்வொரு சொல்லும் என் செவியில் இசையாய் தளம் போடுகின்றன அவள் விரல் தொடும் ஒவ்வொரு ஸ்பரிசமும் என் உயிரணுக்கள் புது உயிர் பெறுகின்றன மழை ஓய்ந்தும் சாரல் ஓயாதது போல் அவளை நாளை காணும் வரை அவள் நினைவுகள் எனது இரவை தாலாட்டும்  

காதல் எனும் விஷம்

காற்றடைத்த மனசு தெக்கு தெச மாறி போக  அத கயிறு போட்டு இழுத்தவளே சந்திக்கும்போது சிரிச்சே கொன்னியடி பாவி மனசுக்குள்ள காதல் எனும் வெஷத்தை வெத்திச்சியடி அறிவுகெட்ட மனசும் ஒன்ன சுத்தி சுத்தி வந்திசேயடி ஓமனசில நா இல்லேன்னு ஏபுத்திக்கு புரியலயேடி நீ குடுத்த மொத பரிசு மட்டும் ஏகிட்ட இருக்க மொத கடலை குடுத்த நீயோ தனிமையாக்கிபோட்டியேயடி வலிக்குதடி நெதமும் நெனச்சா நெஞ்சு வலிக்குதடி ஒ சிரிப்பு ஒ பாசம் ஒ குறும்பு ஒ பேச்சு ஒ வெக்கம் போதுமடி என்னை அணு அணுவை கொல்ல  

நானும் மனுசனே புத்தன் அல்ல

விஷயம் அறியாமல் வசை பாடினேன் என்றார்கள்  அவளின் உணர்வுகள் தெரியாமல் நான் வார்த்தைகளை உமிழ்ந்தேன் என்றார்கள் அங்கொன்று இங்கொன்று கோர்த்து திரித்து பேசுகிறேன் என்றார்கள் வெறுக்காதே அன்பு செய் என்று கருத்தும் கூறினார்கள் அவள் இயல்பாக இல்லை என்று சொன்னால் இது என் விபரீத கற்பனை  என்றார்கள் திடீர் விலகல் திடீர் மௌனம் திடீர் அசாதாரண நடத்தைகள் எங்கனம் என் மனம் பொறுக்கும் நானும் மனுசனே புத்தன் அல்ல

சில்லென ஒரு நிலவு

காலைநேரம் கடல்கரை சாலை ஓரம் பேருந்தில் வந்திறங்கியது சில்லென ஒரு நிலவு என் விழி மூடி மூடாமல் அவளை ரசித்தன மெதுவாக என்னருகில் வந்து சிரித்தால் கடல் காற்று கூட குளிர்ந்தது அவள் புன்னகையால் முகத்தில் கலைந்த கூந்தலை காது மடலில் சொருகும் அழகை பார்த்து சொக்கி போனது எனது உள்ளம் நடந்தோம் சில தூரம் உள்ளங்கள் மகிழ கவலைகள் மறந்து பிரிந்தோம் சிறு நேரத்தில் சிந்திப்போம் எண்ணத்தோடு  

யார் தவறு

ஏன் நாம் சந்தித்தோம்  ஏன் நாம் பழகினோம் பிரிவோம் என்று தெரிந்தும் உன்னை ஏன் மணக்க நினைத்தேன் நான் நினைத்ததும் தவறில்லை நீ மறுத்ததிலும் தவறில்லை யார் தவறு என்பதை காலம் அறியும்

வினையான குறும்பு

குறும்பாக என் வாயால் விழுந்த வார்த்தை அவளின்  பிஞ்சு மனதை சுட்டது ஒரு கணம் அதிர்ந்தாள்  குழம்பினாள் சொன்ன வார்த்தை குறும்பென்று தெரியாமல் இதை தெரிந்த என் மனமோ துடித்தது ஏன் அவள் புரியவில்லை நான் செய்த குறும்பை நான்  என்னையே வெறுத்தேன் இனியும் செய்யேன் அவளை புண்படுத்தும் குறும்பை அவள் மறந்தாலும் நான் மறவேன் தவமின்றி கிடைத்த அவளின் நட்பை  

முதல் முத்தம்

என்னவளின் இதய துடிப்பு எப்படி என் செவி கேட்டது அவளின் மூச்சு காற்று எப்படி என் உடம்பை சூடாக்கியது என் கை விரல் மரக்கட்டை போல விறைத்து கெடக்கு இமைக்குள் என் விழிகள் எப்படி சொர்கத்துக்கு சென்றது இவை என்றும் மறவா நினைவில் உள்ள என்னவளின் முதல் இதழ் முத்தம் அனுபவம்  

காதல் வலி

நெடு நாள் பழகியும் உணராத வலி  இன்று  மட்டும் ஏன் உணர்தேன் இன்று மட்டும் ஏன் நடு நிசியிலும் இமை மூட மறந்தும் உன் பெயரை வாசிக்கும் விழிகள் இப்போவே உன்னோடு உரையாட இன்று  மட்டும் ஏன் இரவு இப்போதே விடியல் ஆகக்கூடாது மனமே இன்றே சொல்லி விடு அவளை கை கோர்த்து கை ரேகை மறையும் வரையும் வரை இறுக பற்றுவேன் என்று

முதல் ஸ்பரிசம்

அந்தி வானம் தன் இரவு உடைக்கு மாறும் நேரம் எதோ ஒரு உணர்வு என் மூச்சு குழல் வழியாக இதயத்தை திறந்து என் இதயத்துடிப்பின் வேகத்தை கூட்டியது ஆம், அது என்னவளின் தாமரை கையின் மெல்லிய ஸ்பரிசம்

முதல் காதல்

எங்கனம் மறப்பேன் உன் நட்பை  எங்கனம் மறப்பேன் உன்னுடன் நடந்த பாதையை எங்கனம் மறப்பேன் உன்னுடன் நான் கொண்ட வன்மத்தை எங்கனம் மறப்பேன் உன்னுடன் நான் மட்டும் கொண்ட காதலை 

ஊமைக்காதல்

பக்கத்தில் இருந்தும் தோணவில்லை  அடிக்கடி கதைத்தும் சொல்லவில்லை உனக்குள் நான் இருப்பதை நான் ஏன் உணரவில்லை நீ பிரியும் வரை ஏன் என் மனம் ஊமையாய் கிடக்கு

பூங்காவில் அறுபது நிமிடம்

அந்தி சாயும் நேரம் என்னவளின் வருகையை  விழி மூடி மூடாமல் தேடியது கண்கள் மனதை மெல்லென வருடியது அவளின் வழமையான வாசனை அவள் என் அருகில் அமர்ந்ததும் ஆணுக்குள்ளும் பெண்மை உண்டென்பதை உணர்தேன் அடிவானம் கூட அவளின் அவருகையால் சிவந்தது கடிகாரத்துக்கு மட்டும் ஏன் இத்துனை அவசரம் அறுபது நிமிடத்தை அறுபது நொடியில் கடந்தது ஏன் ? மீண்டும் அவளை பிரிந்தேன் என் மனதில் அல்ல இந்த பூங்காவில்

இரவு போர்வை

அன்பே உன்னுடன் இருக்கும் போது சேமித்த வெப்பம் இந்த குளிர் இரவில் என் போர்வையாக கூடாதா

தூரம்

உன் உயிர் நண்பனுக்கும் என் நட்புக்கும் தூரம் அதிகம் உன் நிறத்துக்கும் என் நிறத்துக்கும் தூரம் அதிகம் உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் தூரம் அதிகம் உன் கரம் சேர துடிக்கும் என் கரத்தின் தூரம் அதிகம் அழகே , என்னை உன் காதலனாக்கி விடு உன்னை என் மனைவியாக்கும் தூரம் தொலைவிலில் இல்லை

கனவு

விழிகளில் உறங்கினாய் கனவினில் விழித்தாய்  விடியலில் தொலைந்தாய்  நிஜத்தில் எப்போதடி வருவாய்

பரிசு பொருள்

நீ எனக்காக தந்தந்தை ஒவ்வொரு நாளும் அணியும் போதும் ஒரு கணம்  வந்து போனாயே கண் முன்னே  இதே உணர்வு நீ அணியும் போதும் வந்ததா நாம் பேசுவதை நிறுத்தினாலும் நமது பரிசு பொருளாவது நம்மை பேசவைக்கும் 

தேவை

எதற்க்கும் ஒரு தேவை இருப்பது உண்மை கல்வியின் தேவை பணத்தின் தேவை காதலின் தேவை காமத்தின் தேவை நட்பின் தேவை  தேடலின் தேவை பிரிவின் தேவை இருந்தும் என் தேவை ஒரு உயிர் தோழி

கள்ளி

உன்னை பார்க்காமல் நிலவு இருட்டாகிட்டு  உன்னோடு பேசாமல் பூக்கள் ஊமையாகிட்டு  உன்னோடு நடக்காமல் சூரியன் ஊனமாகிட்டு  இயற்கையே உன்னை மாற்றிய அந்த  கள்ளியை வரச்சொல் என்னை திருடிச்செல்ல! 

பொல்லாத மனம்

அட போடா மனமே மறக்கமாட்டாய பழைய நினைவை அழிக்க அழிப்பான் இல்லையே விளங்கமாட்டாய புத்தி சொல்ல பக்கத்தில் நண்பனும் இல்லையே புரிந்துகொள்ளமாட்டாய நடப்பவை நல்லதுக்கே என்று   யோசிக்கமாட்டாய நான் இன்னும் வாழ வேண்டும் என்று  

இரு வரி கவி

இமை என்னும் மூடிய திரையில் கண்கள் மட்டும் காணும் காட்சி -  கனவு   இரவு என்னும் போர்வையில்  ஒட்டிக்கொண்ட மின்மினி பூச்சி  -  நட்சத்திரம் வானத்து பறவை ஓய்வெடுக்க  கட்டப்பட்ட அசையும் மெத்தை -  மேகம்

பிச்சை வம்சம்

கல்விக்கும் கலவிக்கும் இடையே  ஒரு புள்ளி தூரம்  நான் பிறக்க அடையாளமாக  இருந்தவனுக்கு அறிவு  வெகு தூரம்  தெருவில் போடும் பிச்சை இனி நமக்கு எட்டா தூரம்  இனியாவது கல்வியோடு  கலவி செய் நமது பிச்சை வம்சம்  என்னோடு ஒழியட்டும்

வண்டு

கதிரவனை கண்ட பூக்கள் எல்லாம்  தன் இதழ்களை விரித்து சிரித்துகொண்டிருக்க   ஒரு பூ மட்டும் காம்பு எனும் கட்டிலில்  இதழ் எனும் போர்வைக்குள் இன்னும் உறக்கம்  அவள் முகம் காண தவம் கிடந்த வண்டு  இதழை திறந்து மெதுவாக உள்ளே சென்றது   வெண்ணிலவின் ஒளியும் மல்லிகையின் வாசமும்  ஒருங்கே சேர்ந்த தன்னவளின்  அமைதியான உறக்கத்தை ரசித்த வண்டு  ஓசை எழுப்பாமல் பறந்து சென்றது 

நான் கண்ட காதல்

மழை ஓய்ந்த பின் உள்ள தெளிவான வானம்  போல் அவளின் முகத்தில் அப்படி ஒரு குளிர்ச்சி  அவள் சிரிப்பில் விழும் கன்னக்குழியில்  விழுந்தவர்கள் பல பேர் இருக்கலாம் ஆனால் எழ முடியாத அளவுக்கு விழுந்தவன் நானாக இருப்பேன்  நாம் கொண்ட செல்ல சண்டைகள் எல்லை மீரா தீண்டல்கள்  கெஞ்சலான கொஞ்சல்கள் தான் எத்தனை இந்த காதல் இப்படியே நீள கூடாத  உயிர் போகும் வரை என் மடி உன் தலையணையாக  இருக்க வேண்டும் என் விரலால் உன் கூந்தல் வருட வேண்டும் 

வாழ்க்கை

நெடும்தூர பயணம் தனிமையில் இரு பாதங்கள் முள் தரும் வலியோடும் கல் தரும் காயத்தோடும் பூ தரும் சுகத்தோடும் நதி தரும் வருடலோடும் காலங்கள் நகர்ந்தன சேர்ந்து போக ஜோடி பாதம் வந்தது ஒருமித்த கருத்து ஒரே நோக்கம் இரு ஜோடியை நட்பாய் மாற்றியது இப்படி ஒரு நட்பா என வியந்தவர் பலர் பொறாமை கொண்டோர் சிலர் கண் பட்டதா? கருத்து வேறுபட்டதா? முறித்து கொண்டது நட்பை  பயணம் முடிய வெகுநாள் உண்டு  அதுவரை எதுவும் நிரந்தரம் இல்லை என் இதை வாசிக்கும் நீ கூடத்தா ன்!

சிறையான வார்த்தை

நம் இருவர் மனசும் அறியும் நம் இருவர் கண்களுக்கும் தெரியும்  நம் பரிமாறும் ஒவ்வொரு சொல்லிலும் கலந்திருக்கும் நம் இருவர் உதடு மட்டும் சொல்ல விடாமல்  தொண்டைக்குழிக்குள் சிறை வைத்திருக்கும் வார்த்தை  "உன்னோடு நான் மட்டும் வாழவேண்டும்"

பசுமை நினைவு

மலை போல் கற்பாறையில்  ஒளிந்து விளையடினோமே  தலையணைக்காக பஞ்சு மரம் மேல் கல் எறிந்தோமே அம்மாவுக்கு தெரியாமல் மரக்குச்சியில் புகை பிடித்தோமே  பள்ளி பஸ் பிடிக்க தொலை தூரம் வலி தெரியாமல் நடந்தோமே ஓடையில் நீராடி தோட்டத்தில்  களவாய் மாங்காய் திரிடினோமே  கலவரத்தில் உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்தோமே எப்படி மறக்கும் என் மனம்  அந்த பசுமை நினைவை 

இறுக்கமான முகம்

இறுக்கமான முகம்  தொடர்கதையான தோல்வியால்  இறுக்கமான முகம்  சந்தர்பவாதியான நண்பனால்  இறுக்கமான முகம்  ஆசைபட்டவை நிராசையால் இறுக்கமான முகம்  தனிமையான நினைவால்  இறுக்கமான முகமே  மலர்ந்து விடு மரணிக்கும் வரை 

நான் விரும்பும் காதலி

நான் உன் விழியை காதலிக்கவில்லை  விழி அசைவை காதலித்தேன்  நான் உன் இதழை காதலிக்கவில்லை  உன் இதழ் சுழிப்பை காதலித்தேன்  நான் உன் கன்னத்தை காதலிக்கவில்லை  உன் கன்னத்துக்குழியை காதலித்தேன்  நான் உன் இமையை காதலிக்கவில்லை  உன் இமையை மறைக்கும் கண்ணாடியை காதலித்தேன்  உன் ஐவிரலை காதலிக்கவில்லை  என்னை தொட்ட விரலை காதலித்தேன்    உன் அழகை காதலிக்கவில்லை  உன் அன்பை காதலித்தேன்  உன் உடம்பை காதலிக்கவில்லை  உன் உயிரை காதலித்தேன் என் உயிர் போகும் வரை  என் காதல் உன்னோடு மட்டும் தான் அன்பே

அனுமதிப்பாயா ?

நீ தூங்கும் நேரம் உன் மூச்சு காற்றை சுவாசிக்க அனுமதிப்பாயா ? கனவிலாவது உன்னை காதலிக்க  அனுமதிப்பாயா ? தூக்கம் கலைகையில் உன் சிணுங்கலை செவிசாய்க்க அனுமதிப்பாயா ? கலைந்து விழும் கூந்தலை உன் காது மடலில் சொருகிவிட அனுமதிப்பாயா ? என் மீதி வாழ்க்கை உன் இதய கூட்டில்  வாழ அனுமதிப்பாயா ?